‘விடுதலை’ படத்தில் எத்தனை இடங்களில் மியூட்? - வெளியான சென்சார் சான்றிதழ்!

வெற்றிமாறனின் ‘விடுதலை - 1’ படத்தில் மொத்தம் 11 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
‘விடுதலை’ படத்தில் எத்தனை இடங்களில் மியூட்? - வெளியான சென்சார் சான்றிதழ்!

வெற்றிமாறனின் ‘விடுதலை - 1’ படத்தில் மொத்தம் 11 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதில் முதல் பாகம் வருகிற 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் சூரி, காவலராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் முதல் பாகம் எடிட் செய்யப்பட்டுள்ளநிலையில், இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படத்தில் 11 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காட்சிகளில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனால், ‘வடசென்னை’ போன்று இந்தப் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ், அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் சந்தானம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com