
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் மற்றும் மேற்குதிசைக் காற்றில் ஏற்படும் வேகமாறுபாடு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 41 சதவிகிதம் பதிவாகியிருப்பதாகவும், இது இயல்பைவிட 29 சதவிகிதம் கூடுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.