
கடும் வறட்சியிலும் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள் காண்போரை கவர்ந்து வருகின்றன.
கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் மஞ்சள் நிற கொன்றை மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவிவரும் நிலையில் அங்கு கொன்றை மலர்கள் பூத்துள்ளதை கண்டு சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் ரசித்து வருகின்றனர்.