[X] Close

இந்திய மண்ணில் முதல் டெஸ்டில் பங்கேற்கும் வங்கதேசம்: இந்திய அணி பேட்டிங் தேர்வு

Bangladesh-started-playing-Test-cricket-in-2000--17-years-later--they-finally-play-a-Test-in-India

இந்திய மண்ணில் வங்கதேச அணி பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கியது.


Advertisement

கடந்த 2000-த்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணி, 17 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வெற்றி முனைப்புடன் களமிறங்குகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 248 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 250 விக்கெட்டுகள் வீழ்த்திய 6 ஆவது இந்தியர் மற்றும் 39வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close