2024க்குள் 1000 பேருக்கு வேலை - ஆகாச ஏர் நிறுவனம் அறிவிப்பு

1000 பேரை புதிதாக வேலையில் அமர்த்த உள்ளது ஆகாச ஏர் நிறுவனம்.
2024க்குள் 1000 பேருக்கு வேலை - ஆகாச ஏர் நிறுவனம் அறிவிப்பு

1000 பேரை புதிதாக வேலையில் அமர்த்த உள்ளது ஆகாச ஏர் நிறுவனம்.

வரும் 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், 1000 பேரை புதியதாக பணிக்கு நியமிக்க உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிக்க உள்ளது. விமானங்களின் எண்ணிக்கையும் விமானம் சென்று சேரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 1000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

7 மாதங்களுக்கு முன்னர்தான் ஆகாச ஏர் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, வெளிநாடுகளுக்கு இயக்க விமான நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. எந்தெந்த நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டும் என்பதை ஆகாச ஏர் நிறுவனம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதுகுறித்து பேசியுள்ள ஆகாச ஏர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான வினய் துபே, "இந்தாண்டின் இறுதிக்குள் 3 இலக்கு எண்ணிக்கையில் விமானங்கள் வாங்க ஆர்டர் செய்யப்படும். இன்று எங்களிடம் 2,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்''  என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com