பும்ராவும் இல்லை, அப்ரிடியும் இல்லை? தினேஷ் கார்த்திக் சொல்லும் சிறந்த பவுலர் யார்?

பும்ராவும் இல்லை, அப்ரிடியும் இல்லை? தினேஷ் கார்த்திக் சொல்லும் சிறந்த பவுலர் யார்?
பும்ராவும் இல்லை, அப்ரிடியும் இல்லை? தினேஷ் கார்த்திக் சொல்லும் சிறந்த பவுலர் யார்?

'மிட்செல் ஸ்டார்க் உலகின் தலைசிறந்த பவுலர்' என பாராட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 9-வது முறையாக ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் அவரது பந்துவீச்சின்கீழ் ஷுப்மன் கில் (0), ரோஹித் சர்மா (13), சூர்யகுமார் யாதவ் (0), கே.எல்.ராகுல்(9) ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்கள் மற்றும் சிராஜ் ஆகியோர் வீழ்ந்தனர். இதனால் இந்திய அணி வெறும் 117 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருண்டது.

இதைத்தொடர்ந்து உலகின் தலைசிறந்த பவுலர் யார் என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிறந்த பந்துவீச்சாளர்களாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர்தான் கூறப்பட்டு வந்தனர். இதில் தற்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் இணைந்துள்ளார். இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கும் இதை உறுதிபட கூறியுள்ளார். அதன்படி ‘உலகின் தலைசிறந்த பவுலர் மிட்செல்’ என வெகுவாகப் பாராட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

பேட்டி ஒன்றில் தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மிட்செல் ஸ்டார்க். அவர் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கிறார். அந்தவகையில் மிட்செல் ஸ்டார்க் தற்போது உலகின் தலைசிறந்த பவுலராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை" என்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com