Published : 19,Mar 2023 07:52 AM

‘இலவச டிக்கெட் இல்லை...’ ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ளவே இத்தனை கோடி செலவுசெய்தாரா ராஜமௌலி?

SS-Rajamouli-Was-Not-Given-Free-Tickets-To-Attend-Oscars-2023--RRR-Filmmaker-Paid-a-Big-Amount

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கு, கடந்த 13-ம் தேதி ஆஸ்கர் விருது கிடைத்திருந்த நிலையில், அவ்விருது விழாவில் பங்கேற்க அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. .

95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுவந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் மேடையில் விருதை பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி, “And must put me on the top of the world" என்று ராகத்தில் பாடி நன்றி தெரிவித்தார்.

image

இந்நிலையில் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்ற RRR படத்தை இயக்கியவர் ராஜமௌலி. அதில் நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸுக்கு ராஜமௌலி சென்றார். ஆனால் அவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இலவச டிக்கெட் இல்லாததால், நபர் ஒருவருக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் செலுத்தி ராஜமௌலி தனிப்பட்ட முறையில் டிக்கெட் பெற்றதாகத் தெரிகிறது. விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

image

விழாவில் ராஜமௌலியுடன் அவரது மனைவி, மகன், மருமகள், நடிகர் ராம்சரண் மற்றும் அவரின் மனைவி, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர். அதன்படி பார்க்கையில், சுமார் 1.44 கோடிவரை ராஜமௌலி செலவு செய்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இதுதொடர்பாக படக்குழு தரப்பில் எந்த விளக்கமும் தற்போதுவரை அளிக்கப்படவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்