மீண்டும் ரோகித் சர்மா - இன்றையப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மீண்டும் ரோகித் சர்மா - இன்றையப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
மீண்டும் ரோகித் சர்மா - இன்றையப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரமாக உள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அணிக்குத் திரும்புகிறார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பவுலிங் அருமையாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலக்கினர். ஆனால் பேட்டிங் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அந்த குறையை களைவார்கள் என எதிர்பார்க்கலாம். விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றன. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com