Published : 18,Mar 2023 04:04 PM

மர்மநபர்களின் வெறிசெயல்: காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊழியரை தாக்கி கொடூரம்!

Miscreants--rampage--After-filling-the-car-with-petrol--they-stabbed-the-employee-and-escaped-

பொள்ளாச்சி அருகே பெட்ரோல் நிலையத்தில் காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அதற்கான பணம் கேட்ட ஊழியரை பட்டா கத்தியை காட்டி மிரட்டி, தட்டி கேட்ட பெட்ரோல் நிலைய ஊழியரை பாட்டிலில் குத்திவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், நேற்று நள்ளிரவு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் சென்றனர். இதை அறிந்த ஊழியர்கள் அவர்களிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்டப்பொழுது , பணம் தர மறுத்ததுடன், காரில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டினர், இதை தட்டி கேட்ட அம்பராம்பாளையத்தை சேர்ந்த நவீன் (22) பங்க் ஊழியரை வயிற்றில் பாட்டிலால் குத்திவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

image

பின்னர் அங்கிருந்த சக ஊழியர்கள் காயமடைந்த நவீனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் நடந்ததை விசாரணை செய்ததுடன், மதன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரில் வந்த நபர்கள் காரை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது, பெட்ரோல் பங்கில் பட்டா கத்தி காட்டி மிரட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்