மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? -நீரியல் வல்லுநர் விளக்கம்

மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? -நீரியல் வல்லுநர் விளக்கம்
மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? -நீரியல் வல்லுநர் விளக்கம்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? என்பது குறித்து நீரியல் வல்லுநர் சிவசுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

அதில், “சென்னையை பொறுத்தவரையில் மழை தானாக சென்று தேங்கும் தாழ்வான இடங்களில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இருந்தன. அந்த தாழ்வான இடங்களில் இருந்த 75 சதவீத நீர் நிலைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே சாலைகளில் மழை நீர் தேங்குகிறது. மழை பெய்யும்போது, அந்த தண்ணீரை சாலைகளுக்கு அனுப்புவதும் தொடர்ந்து பிரச்னையாக தான் இருக்கும். அதற்கு பதிலாக ஒவ்வொரு வீடுகளிலும், குடியிருப்பு இடங்களிலும் மழை நீரை சேமிக்க கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம் ஏராளமான தண்ணீரை நாம் சேமிக்க முடியும். சாலையில் மழைநீர் தங்குவதை தடுக்க முடியும். மேலும் வறட்சி ஏற்படும்போதும் இந்த தண்ணீர் மூலம் சமாளிக்க முடியும். மழைநீர் கட்டமைப்பு என்பது ஓரளவுக்கு பயனளித்தாலும் இந்த தண்ணீரை சேமிக்க திட்டமிடுவதுதான் சரியான வழியாக இருக்கும்.

சென்னையில் சில இடங்களில் மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக்கப்படாமல் இருப்பது மழை நீர் வடிகால்கள் தாழ்வான இடங்களில் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்க அந்த இடங்களிலேயே தண்ணீரை சேமிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துவது, சுரங்க பாதை வழியாக தண்ணீரை கொண்டு செல்ல வழிவகை செய்வது போன்றவை அவசியம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com