பட்டியலின மாணவனை மண்டியிட வைத்து கொடூரமாக நடத்திய ஆசிரியர் - போலீஸ் விசாரணை

பட்டியலின மாணவனை மண்டியிட வைத்து கொடூரமாக நடத்திய ஆசிரியர் - போலீஸ் விசாரணை
பட்டியலின மாணவனை மண்டியிட வைத்து கொடூரமாக நடத்திய ஆசிரியர் - போலீஸ் விசாரணை
ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் பட்டியிலின மாணவனை மண்டியிட வைத்து பிஸ்கட்டை தூக்கி எரிந்து நாயை போல் சாப்பிட வைத்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் மற்றூம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போடியநாயக்கன் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக மணிகண்டன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று  தொட்டியப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பூர்ணிமா மற்றும் ஆசிரியர் உமாதேவி உள்ளிட்ட 2 பேரும் விடுமுறை என்பதால் தற்காலிகமாக ஆசிரியராக மணிகண்டனை மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் மணிகண்டன் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்ளிட்டோரை அருகில் உள்ள கடைக்குச் சென்று தின்பண்டங்கள் வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். ஆசிரியர் கூறிய திண்பண்டங்களை சரியாக வாங்காமல் வந்த மாணவை திரும்ப திரும்ப 3 முறை கடைக்கு அனுப்பி முறுக்கு, பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கிவர வைத்ததாகத் தெரிகிறது.
இதில் முறுக்கை சாப்பிட்ட ஆசிரியர் மணிகண்டன் நான் சொன்னதை கூட சரியாக வாங்க தெரியாதா? எனக் கூறி பிஸ்கட்டை தரையில் போட்டு மாணவனை மண்டியிட சொல்லி நாயைப்போல் சாப்பிட வைத்து, தரையில் கிடந்த வேஸ்ட் பேப்பர்களை எடுத்து மாணவன் பாக்கெட்டில் வைத்து இதுதான் இனிமேல் உங்களுடைய குப்பைத்தொட்டி எனக் கூறி கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அழுதுகொண்டே பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் 7 மணியளவில் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இன்று ராசிபுரம் காவல் நிலைய்த்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். 
இதனை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பரமணி, அருள்மணி, ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் தங்கம் உள்ளிட்டோர் இருதரப்பினரிடம் விசாரணை செய்தனர். முழுமையான விசாரணைக்கு பின் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பரமணி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com