Published : 16,Mar 2023 07:04 PM
திடீரென இரவாக மாறிய நண்பகல்.. அச்சத்தில் மூழ்கிய மிசோரம் மக்கள்!

சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து காற்றுடன் கனமழை பெய்தது. அடர்த்தியான கருமேகம் என்பதால் நண்பகல் ஒரு மணி என்பது இரவு போல் மாறியது. வாகன ஓட்டிகள் முகப்பு வழக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கும்மிருட்டாக இருந்ததால் அதனை ஒளிப்பதிவு செய்த மிசோரம் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அண்மைக்காலத்தில் இதுபோன்ற வானிலை மாற்றத்தை பார்த்ததில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.