Published : 16,Mar 2023 03:58 PM

ஆதார் தகவல்களை மாற்ற இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இலவசம்.. மத்திய அரசு சொல்வதென்ன?

Aadhaar-card-details-can-be-updated-free-of-charge-on-the-website-for-the-next-3-months-the-central-government-said-Government-has-announced

ஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை செய்துள்ளது. இதன்படி, மக்கள் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP நம்பர் மூலமாக தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

image

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை myaadhaar இணையதளம் மூலமாக மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இலவசமான முறையில் புதுப்பித்துக் கொள்ள முடியும். பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால் இதில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆதாா் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொலைபேசி எண்ணை மாற்ற விரும்பும் நபர்கள் ஆதார் மையத்திற்கு நேரடியாகச் சென்றுதான் மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் குறிப்பிட்ட நாளில் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுவிடும். அதன்பின் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையானது 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் உங்கள் வீட்டு முகவரியை வந்து சேரும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்