Published : 15,Mar 2023 06:18 PM

இரவில் தந்தை மரணம்... காலையில் பொதுத்தேர்வுக்கு சென்ற +2 மாணவன்! கிருஷ்ணகிரியில் சோகம்

Krishnagiri-plus-2-student-went-to-write-public-exam-in-morning-whose-father-died-at-night

ஊத்தங்கரை அருகே தந்தை இறந்த நிலையில், பிளஸ் 2 தேர்வெழுத சென்றுள்ளார் மாணவரொருவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியையடுத்த கல்லாவி கீழ் காலனியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியாமல் இருந்து வந்துள்ளார். அவருடைய மகன் ஜெகத், கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழில் பிரிவில் படித்து வருகிறார். தற்போது +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வை எழுதி வருகிறார் ஜெகத்.

image

இந்நிலையில் நேற்று இரவு ஜெகத்தின் தந்தை கோடீஸ்வரன் உடல்நலக்குறைவால் மரணித்துள்ளார். தந்தையை இழந்துவிட்ட சோகம் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய ஆங்கிலத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார் ஜெகத்.

image

இதனைத்தொடர்ந்து தேர்வெழுத பள்ளிக்கு சென்ற ஜெகத்தை சக மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறி தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். தந்தை இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தபோதிலும், ஆண்டு முழுக்க தான் படித்த படிப்பு வீணாக கூடாது என்ற காரணத்தினால், மாணவர் ஜெகத் தேர்வு எழுத சென்றதாக சொல்லப்படுகிறது.

image

இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்