
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறவுள்ளது. விராத் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டது. தொடரைக் கைப்பற்றி சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி, கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று, தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.