Published : 15,Mar 2023 12:48 PM

சேலம்: கடத்திச் செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தாங்க... தோழி மீது மனைவி புகார்

Salem-Rescue-the-abducted-husband-Wife-complains-about-her-friend

ஓமலூர் அருகே கணவரை கடத்திச் சென்று விட்டதாக இளம்பெண் ஒருவர் தனது தோழி மீது ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் - முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், மோகன்குமார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முனியம்மாளுடன், சேலம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த கலையரசி என்பவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதையடுத்து கலையரிசிக்கு திருமணமாகி அய்யனார் என்ற கணவரும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

image

இந்தநிலையில், கலையரசி அடிக்கடி முனியம்மாள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது கலையரசிக்கும், முனியம்மாள் கணவர் மோகன் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் தனியாக சந்தித்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கலையரசியும், முனியம்மாள் கணவர் மோகன்குமாரும் வீட்டை விட்டுச் சென்று விட்டனர். இதையடுத்து இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், கலையரசியின் கணவர் அய்யனார், தனது மனைவியை முனியம்மாள் கணவர் மோகன்குமார் கடத்திச் சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து தனது மனைவியை மீட்டு கொடுக்குமாறும், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

image

இதனைத் தொடர்ந்து முனியம்மாள், தன்னுடன் படித்த கலையரசி என்பவர் தனது கணவரை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், தனது தோழியிடம் இருந்து கணவரை மீட்டு தரும்மாறும் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், மோகன்குமார், கலையரசியை தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்