Published : 14,Mar 2023 01:24 PM

'எனது மகன், சகோதரன், குடும்பம் நீ!' - லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்து சொன்ன சஞ்சய் தத்!

Sanjay-Dutt-calls-Lokesh-Kanagaraj-his-son-hugs-him-in-birthday-post-HBD

காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

‘விக்ரம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தை போல் இல்லாமல், 100 சதவீதம் தனது பாணியில் இந்தப் படம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

image

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படக்குழுவினருடன் நேற்று நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அக்கொண்டாட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் பிறந்த நாள் கொண்டாடிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ‘லியோ’ படத்தின் இணை தயாரிப்பாளரும், விஜய்யின் மேனேஜருமான ஜெகதீஷ்ஷூம், லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவற்றைத் தொடர்ந்து பிறந்தநாள் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்