Published : 14,Mar 2023 09:13 AM

கன்னியாகுமரி: சுற்றி அடிக்கும் சூறைக்காற்று சீற்றமான கடல் - கரையில் காத்திருக்கும் படகுகள்

KANNYAKUMARI-Raging-seas-swirling-around-boats-waiting-on-the-shore

குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கடல் சீற்றமாக இருப்பதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது. தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுவமையம் எச்சரிக்கை விடுத்தது.

image

இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று பலத்த சூறைக் காற்றும் வீசிவந்த நிலையில், இன்று சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் தங்கள் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.