Published : 12,Mar 2023 10:48 PM
முதல்வர் ஷிண்டே இருந்த ஓபன் வேனில் சிவசேனா எம்எல்ஏவுக்கு முத்தமிட்ட செய்தி தொடர்பாளர்!

ஆசிர்வாத யாத்திரையின்போது சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ பிரகாஷ் சர்வேயும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோவானது இணையங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
சனிக்கிழமை இரவு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பேரணியில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ பிரகாஷ் சர்வே மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரே ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர். அந்த வீடியோவில், முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர் ஓபன் வேனில் நின்றபடி இருபுறம் உள்ள மக்களுக்கு கையசைத்துக் கொண்டே செல்கின்றனர். சிவசேனா கட்சி எம்.எல்.ஏ பிரகாஷ் சர்வே முன்புறம் நிற்க அவருக்கு பின்புறம் ஷீத்தல் மாத்ரே நிற்கிறார். பிஸியாக கையசைத்துக் கொண்டிருந்த பிரகாஷை ஷீத்தல் மாத்ரே கூப்பிடுகிறார். திரும்பிப் பார்த்த அவரது கன்னத்தில் முத்தமிடுகிறார் ஷீத்தல் மாத்ரே. பின்னர், அவர் ஏதோ கையை நீட்டி பேசுகிறார். இவைதான் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
அந்த பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது நாடளவில் வைரலாகி வருகிறது.
No caption #पक्याची_परीpic.twitter.com/E9Pq7v0fmo
— भिकु (@bhiku_007) March 11, 2023
இதனையடுத்து, ஷீத்தல் மாத்ரே, இந்த செயலுக்கு காரணமானவர்களை கடுமையாக சாடியதுடன், தனது நடத்தையை அவமதித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசியலில் ஒரு பெண்ணை பற்றி சொல்வதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அவளது நடத்தையை இழிவுபடுத்துவதுதான் இந்த வீணான கூட்டத்தின் கலாசாரமா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
राजकारणामधील महिलेसंदर्भात बोलण्यासारखे काही नसले तर तिचे चारित्र्यहनन करणे हेच उद्ध्वस्त गटाचे संस्कार आहेत?? मातोश्री नावाच्या fb पेजवरुन एका स्त्री संदर्भात असा morphed video upload करताना बाळासाहेबांचे संस्कार नाही का आठवले? pic.twitter.com/rpaqbMtiZU
— sheetal mhatre (@sheetalmhatre1) March 11, 2023
அதேபோல் அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது எனவும், பிரகாஷின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி செய்ததாகவும் பிரகாஷின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு அந்த வீடியோ வைரலானதை அடுத்து, இதுகுறித்து தஹிசார் போலீசார் இந்திய சட்டப்பிரிவுகள் 354, 509, 500, 34 மற்றும் 67-இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து மானஸ் குவார்(26) மற்றும் அஷோக் மிஸ்ரா(45) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.