[X] Close

இஸ்லாமியராக நடிக்க நிறம் மாறிய களஞ்சியம்!

Kalanjiam-changed-his-colour-for-movie

’களவுத் தொழிற்சாலை’ படத்தில் இஸ்லாமியராக நடிக்க சில லட்சம் ரூபாய்களை செலவு செய்து தனது உடல் நிறத்தை மாற்றினேன் என்று இயக்குனரும் நடிகருமான மு.களஞ்சியம் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ’’களவு தொழிற்சாலை’ படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நடித்துள்ளேன். இஸ்லாமிய அதிகாரி ஒருவர், இந்து மத கடவுள் சிலைகளை கடத்துவதை தடுத்து நிறுத்தும் கேரக்டர். அதில் நடிக்க தடையாக இருந்தது எனது நிறம். அதை கொஞ்சம் வெளுப்பாக மாற்றி இஸ்லாமியர் போல தோற்றத்தை கொண்டு வந்தால் நீங்கள் நடிக்கலாம், முடியுமா? என்று இயக்குனர் டி.கிருஷ்ணசாமி கேட்டார். சரி என்று மூன்று மாதம் போராடி எனது நிறத்தை மாற்றினேன். பல லட்சம் ருபாய் செலவானது. நான் இர்பான் கேரக்டராக மாறி இயக்குனர் முன்னால் நின்றேன் .  என்னால் நம்பவே முடியவில்லை என அசந்து போனார். 
இந்தப் படத்தில் என் நடிப்பை பார்த்தவர்கள், அது நீங்களா? என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதுமுகங்களை வைத்து நான் தயாரித்து இயக்கி முடித்திருக்கும் ‘முந்திரிக்காடு’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது’ என்றார். 
 


Advertisement

Advertisement
[X] Close