Published : 11,Mar 2023 10:55 PM

சீன உற்பத்தி நிறுவனம் வசம் செல்கிறதா மூடப்பட்ட சென்னை ஃபோர்டு தொழிற்சாலை?

Chinese-electric-car-maker-buying-Ford-factory

மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையை வாங்குவதற்காக, சீன மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டீலுனு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த ஃபோர்டு கார் தொழிற்சாலை கடந்த வருடம் மூடப்பட்டது. குஜராத் சனந்த் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கிய நிலையில், சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு ஆலையை சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான BYD மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

சீன எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான BYD எலக்ட்ரிக் கார்கள், பஸ்கள், லாரி போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் மின்சார வாகன சந்தையில் 4வது இடம் வகிக்கும் சீன நிறுவனமான BYD, பிரேசில் மற்றும் ஜெர்மனியில் உள்ள Ford தொழிற்சாலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையும் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றுவதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்