Published : 11,Mar 2023 09:09 PM

“5 ஆண்டுகளில் நீங்க இறந்துடுவீங்க” - அச்சத்தில் 294 கிலோ எடையை 165 கிலோவாக குறைத்த நபர்!

Man-loses-165-kg-after-doctor-said-he-was-a-ticking-time-bomb-in-US-shares-pics

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 165 கிலோ எடையை குறைத்து, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மிசிசிப்பியைச் சேர்ந்த நிக்கோலஸ் கிராஃப்ட் என்பவரின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், முதலில் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை. ஆனால், நாளாக நாளாக நிக்கோலஸ் கிராஃப்டின் உடல் எடை கணிசமாக அதிகரிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில், அவரது உடல் எடை 294 கிலோவாக அதிகரித்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற நிக்கோலஸிடம் உடனடியாக உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் 3 முதல் 5 ஆண்டுகளில் நீங்கள் இறந்து விடுவீர்கள் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

image

இதையடுத்து, உடல் எடையை குறைக்க முடிவெடுத்த நிக்கோலஸ் கிராஃப்ட், தினமும் உடற்பயிற்சி செய்வது என முடிவெடுத்தார். சில மாதம் உடற்பயிற்சிக்கு பின்னர், அவரது உடல் எடை வெறும் 18 கிலோ மட்டுமே குறைந்திருந்தது. அப்போதுதான், தனது உணவுப் பழக்கத்தையும் சேர்த்து மாற்ற முடிவு செய்திருக்கிறார்.

இப்படி செய்ததில் அவரது உடல் எடை 3 ஆண்டுகளில் சரசரவென குறையத் தொடங்கியது. இப்போது 165 கிலோ எடையை குறைத்துள்ள நிக்கோலஸ் 129 கிலோ எடையுடன் காட்சியளிக்கிறார். அபாயக் கட்டத்தை தாண்டிவிட்ட நிக்கோலஸ், தனது உடல் எடையை இன்னமும் குறைக்க முயன்று வருகிறார்.

ஆரம்பத்தில் உடல் எடை பிரச்சினையால் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் ஆனால் குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால்தான் உடல் எடையை குறைக்க முடிந்ததாகவும் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார். உடல் எடையை குறைத்ததால் ஏற்பட்டுள்ள தோல் சுருக்கம் தனக்கு தொந்தரவும் வலியும் தரக்கூடிய வகையில் உள்ளதாக கூறும் நிக்கோலஸ், அதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறார். 165 கிலோ எடையை குறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்