Published : 11,Mar 2023 04:15 PM

தொடரும் சதம் வேட்டை - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுப்மன் கில் அபார ஆட்டம்

India-vs-Australia-Shubman-Gill-slams-his-2nd-Test-century

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9ம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது.

image

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். ரோகித்தின் விக்கெட்டுக்குப் பிறகு சுப்மன் கில்லும் புஜாராவும் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். மிகவும் கவனமாக விளையாடிய சுப்மன் கில், 194 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம். சுப்மன் கில் கடந்த 3 மாதங்களில் அனைத்து வடிவங்களிலும் 6 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுபுறும் புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 187 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. அதைத்தொடர்ந்து சுப்மன் கில் 128 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேற, இந்திய அணி 87 ஓவர்கள் முடிவில் 258 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலிய ஸ்கோரை விட இந்திய அணி 222 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் விராட் கோலியும் (42), ஜடேஜாவும் (2) இணைந்து அணியை கரைசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்