Published : 10,Mar 2023 08:22 PM
காத்துவாக்குல 2 காதல்.. கையில் குழந்தைகள்! ஒரே மேடையில் 2 காதலிக்கும் தாலிகட்டிய இளைஞர்

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் குழந்தைகள் பிறந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன், தெலங்கானாவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் தன்னுடைய இரண்டு காதலிகளையும் கரம்பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சமந்தா, நயன்தாரா என இருவரையும் ஒரே நேரத்தில் காதல் செய்வதுபோல் படம் எடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள பத்ராதிரி கோதகுடம் மாவட்டம் எர்ராபோரு கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியினரான சத்திபாபு.
இவர், செர்ளா மண்டலம் தோசப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னா என்பவரை பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்த அதேநேரத்தில், செர்ளா மண்டலம் கர்னேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவரும், தனது உறவினருமான சுனிதாவையும் காதலித்து வந்துள்ளார் சத்திபாபு. மேலும், இரு பெண்களுடனும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் சத்திபாபு 3 வருடங்களாக இருந்துவந்தநிலையில், (பெரியவர்கள் யாரும் எதிர்க்கவில்லை) ஸ்வப்னாவுக்கு பெண் குழந்தையும், சுனிதாவுக்கு ஆண் குழந்தையும் அண்மையில் பிறந்துள்ளது.
இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு எடுக்கப்பட்ட நிலையில், சத்திபாபுவின் முதல் காதலியான ஸ்வப்னா முதலில் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் அவரை சமாதானப்படுத்திய சத்திபாபு, அவரது குடும்பம் மற்றும் இரண்டு மணமகள்களின் குடும்பங்கள் என மூன்று குடும்பத்தாரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதற்காக அச்சிடப்பட்ட திருமணப் பத்திரிக்கையிலும் இரு மணமகள்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்த திருமண பத்திரிக்கை வைரலான நிலையில், சில மீடியாக்களை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்ததால் பயந்துபோன மூன்று குடும்பத்தாரும், அதிகாரிகளால் திருமணம் தடைப்பட்டுவிடுமோ என்று எண்ணி நேற்று காலை கோலாகலமாக நடைபெற இருந்த திருமணத்தை புதன்கிழமை இரவே உறவினர்கள் முன்னிலையில் நடத்தி முடித்தனர்.
அதன்படி சத்திபாபு, தனது காதலிகளான ஸ்வப்னா மற்றும் சுனிதாவை ஒரே மேடையில் கரம் பிடித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
A man marries 2 women at a time, took place at Erraboru in #Cherla mandal in #Kothagudem dist, he has been live-in relationship with them for the past 3 years and had children with both of them.
— Surya Reddy (@jsuryareddy) March 9, 2023
Parents of the women forced him to marry their daughters and he agreed.#Telanganapic.twitter.com/bYyRFBR1zR