Published : 30,Sep 2017 04:23 AM

பேர்ஸ்டோவ் விளாசல்: இங்கிலாந்து வெற்றி

Bairstow-141--Roy-96-seal-series-4-0-for-England

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கான  5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி சவுத் ஆம்டனில் நேற்று நடந்தது. ’டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹோப் அதிகப்பட்சமாக 72 ரன்கள் எடுத்தார். கெய்ல் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 38 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணியின் ராய் 96 ரன்னும், பேர்ஸ்டோவ் 114 பந்துகளில் 141 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்