Published : 09,Mar 2023 03:21 PM

கொழும்பிலிருந்து திருச்சிக்கு பெண் விமானிகளே இயக்கிய விமானம்!

Women-Day-celebrations-were-celebrated-across-the-world-yesterday

உலகம் முழுவதும் மகளிர் தின விழாக்கள் நேற்று (08.03.2023) கொண்டாடப்பட்டது. கொழும்பில் இருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை நேற்று பெண்களே இயக்கினர். பைலட், கோ பைலட் இருவரும் பெண்கள் தான். வழக்கமாக விமானப்பணி பெண்கள் மட்டுமே பெண்களாக பணியில் இருப்பார்கள். நேற்று பைலட்டுகளும் பெண்களாகவே இருந்தனர்.

image

குறிப்பிட்ட நேரத்தில் இந்த விமானம் திருச்சி வந்து தரையிறங்கி பயணிகளை இறக்கி விட்டது. பின்னர் பெண் பைலட்டுகள், விமான பணிப்பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதே விமானத்தை அவர்கள் மீண்டும் கொழும்புக்கு இயக்கிச் சென்றனர். மகளிர் தினத்தில் பெண் விமானிகளே இந்த விமானத்தை இயக்கி மகளிர் தினத்திற்கு பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்