Published : 07,Mar 2023 09:04 PM

சென்னையை அதிரவைத்த ஹிஜாவு நிறுவன மோசடியால் ஏமாந்தவர்களின் கண்ணீர் கதை!

financial-institution-called-Hijavu-has-staged-yet-another-scam-in-Chennai

ஆருத்ரா, ஐஎப்ஃசி உள்ளிட்ட நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான நிதி மோசடியை கண்கூடாக அறிந்தும் கூட, தீரா ஆசையால் திகட்டாத வருமானம் வேண்டியிருந்த மக்களிடம் ஹிஜாவு என்ற நிதி் நிறுவனம் சென்னையில் மீண்டும் ஒரு மோசடி  சம்பவத்தை அரங்கேறியுள்ளது.

நவீன நாகரீக வளர்ச்சியில், நடப்பவை அனைத்தும் நல்லவை என நம்பும் நம்மில் சிலர், இன்னும் ஏமாளியாகவே இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக,  ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் நிதி நிறுவனம் ஒரு மாபெரும் மோசடியை செய்துள்ளது.

அதுபற்றிய விரிவான தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்:சென்னை: சுமார் 1.25 லட்சம் பேரிடம் ரூ. 10,000 கோடி வரை மோசடி... தந்தை மகன் தலைமறைவு!

image

இந்த மோசடியில் சிக்கிய சிலர் தங்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரை, தங்களையும் அறியாமல் இந்த மாய வலையில் சிக்க வைத்துள்ளனர். முதலீடுகளுக்கு உண்டான வட்டித்தொகையை கடந்த சில மாதங்களாக கொடுக்க இயலாத அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சரியான விளக்கத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி் சென்றுள்ளது. சுமார் 1.25 லட்சம் பேர் இதில் ஏமாற்றபப்ட்டுள்ளனர்.

அப்படி ஏமாந்த ஒருவர்தான், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பழ வியாபாரியின் மனைவி லதா. இவர் ரூ. 10 லட்சத்தை கொடுத்து ஏமாந்த கதை நம்மையும் திகைக்க வைக்கிறது. ''என் மருமகன் கார் வாங்க 50 ஆயிரம் கேட்டார். அவரிடம் கூட பணம் கொடுக்காமல் அவருக்கு தெரியாம என் மகளின் நகைகளை அடகு வைத்து நிதி நிறுவனத்தில் செலுத்தினேன். இப்போ...” என்கிறார் அவர்.

ஹிஜாவு நிதி நிறுவனம் ஏமாற்றுவது தெரியவந்ததும் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரை அடுத்து, ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் சௌந்தரராஜன், அலெக்சாண்டர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. மேலும், மோசடியில் தொடர்புடைய வீடு, அலுவலகம் உட்பட 32 இடங்களில் சோதனையும் நடைபெற்றது. இதில், இந்த நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

image

தமிழகத்தில் மட்டுமல்ல புதச்சேரியை சேர்ந்தவர்களும் இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். சாதாரண கடை வைத்து அதில் கிடைத்த பணத்தை மிச்சப்படுத்தி பிறரின் ஆசை வார்த்தை கேட்டு ஏமாந்திருக்கிறார் குமார் என்பவர். அதேபோல ஒய்வு பெற்ற பின்பு கிடைத்த பணத்தை வைத்து தனது வாழ்நாள் முழுவதும் யாரையும் எதிர்பார்த்து இருக்ககூடாதென நினைத்து, வட்டிக்கு ஆசைப்பட்டு இந்த நிதி்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார் கருணாகரன் என்ற முதியவர். 

ஆசை கொண்ட மக்களின் ஆழ்மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்து, பல பேரிடம் நிதி மோசடியில் ஈடுபடும் இதுபோன்ற நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணத்தை திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். மக்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்