Published : 07,Mar 2023 05:06 PM

சாரா’ஸ் வரிசையில் ராஷ்மிகா மந்தனா.. சுப்மன் கில்-லோட க்ரஷ் யாருப்பா? அவரே சொன்ன நச் பதில்!

Shubman-Gill-rubbishes-reports-of-him-having-crush-on-Rashmika-Mandanna-

“சாரா டெண்டுல்கரும் இல்லை, சாரா அலி கானும் இல்லை... இந்த நடிகை மீது தான் சுப்மன் கில்லிற்கு அதீத விருப்பம்” எனக்கூறி நடிகை ராஷ்மிகாவுக்கும் சுப்மன் கில்-க்கும் தொடர்பிருப்பதாக பரவிய செய்திகளுக்கு, சுப்மன் கில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சினிமாவை சேர்ந்தவர்களும், கிரிக்கெட்டை சேர்ந்தவர்களும் காதல் விஷயங்களிற்காக தலைப்பு செய்தியாவது இன்று நேற்று நடப்பதல்ல. காலம் காலமாக நடக்கிறது! இருப்பினும் அவற்றில் பெரும்பாலும், வெறும் செய்தியாகவே முடிந்துவிடும்... சிலதான் நிஜமாகும். இந்நிலையில் அப்படியான ஒரு காதல் விவகாரத்தில் தற்போது தலைப்பு செய்தியாகியிருக்கிறார் இந்திய அணியின் 23 வயது இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்.

image

சச்சின் மகள் சாரா டெண்டுல்கரா? இந்தி நடிகை சாரா அலி கானா? எந்த சாரா?

சுப்மன் கில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலிக்கிறார் என்றுதான் முதலில் செய்திகள் பரவின. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில், சுப்மன் மற்றும் இந்தி நடிகையான சாரா அலி கான் இருவரும், துபாயில் டேட்டிங் சென்று இரவு உணவு சாப்பிட்ட புகைப்படம் வைரலாக பரவியது.

image

இந்நிலையில் ‘சச்சின் மகள் சாராவா இல்லை இந்தி நடிகை சாரா அலிகானா... இரண்டு சாராக்களில் யார் தான் சுப்மன் கில்லின் காதலி’ என்று இணையவாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் எழுதினர். இருப்பினும், சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் பல்வேறு நேர்காணல்களின் போதும், தாங்கள் வெறும் நண்பர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

2 சாராவும் இல்லை இவர் தான்!

image

இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையானா ராஷ்மிகா மந்தனா தான் சுப்மன் கில்லின் க்ரஷ் என்றும், கில் அவருக்காக ஒரு விஷயத்தை செய்து வைத்திருக்கிறார் சுப்மன் கில் என்றும் செய்திகள் பரவின. பாலிவுட் சினிமாவின் செய்திப்பக்கமான ஒன்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபற்றி “சமீபத்திய ஒரு ஊடக உரையாடலின் போது, சுப்மன் கில்லிடம் அவருக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என கேட்கப்பட்டது. அதற்கு ஆரம்பத்தில், சுப்மன் சிரித்துக்கொண்டே பதிலளிப்பதைத் தவிர்க்க முயன்றார்.

ஆனால் தொடர்ந்து அவரிடம் கேள்விகேட்டபோது, தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தன்னா என்று அவர் கூறியுள்ளார். மேலும் ராஷ்மிகா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக அவர் கூறினார் என்றும், அவருக்காக ஒரு விஷயத்தை கில் வைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை ராஷ்மிகாவின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுபற்றி ராஷ்மிகா இன்னும் பதிலளிக்கவில்லை என்பதால், இதற்கு ராஷ்மிகா எப்படி பதிலளிப்பார் என்று இருவரின் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Shubman Gill is being talked about falsely, he has no affair with this actress, he himself

அந்த இன்ஸ்டா பதிவுக்கு, சுப்மன் கில்லின் சில ரசிகர்கள் தங்களுடைய கோபத்தையும், அதிருப்தியையும் கமெண்ட் செக்‌ஷனில் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த இன்ஸ்டா பதிவுக்கு, சுப்மன் கில்லே கமெண்ட் செய்திருக்கிறார். அதன்மூலம் அவர் அனைத்து விதமான வதந்திக்கும் முடிவு கட்டியுள்ளார்.

image

அந்த இன்ஸ்டா கமண்ட் கில், “எந்த மீடியோவோடு நான் பேசியபோது இது நடந்தது? எனக்கே இதுபற்றி எதுவும் தெரியாதே” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவருடைய ரிப்ளேவில் ரசிகர்கள் பலரும் “நல்ல வேளை அதை உண்மைனு சொல்லவில்லை நீங்கள்” என நகைப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்