Published : 06,Mar 2023 10:53 PM
"எனக்கு இங்க நல்ல சம்பளம்.." மனம் திறந்து பேசிய வடமாநில தொழிலாளர்

கோவை ஈச்சனாரி தொழிற்பேட்டை பகுதியில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளருடன்தமிழ்நாடு அவருக்கு எந்தளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பது பற்றி புதிய தலைமுறை சார்பாக பேசினோம்.
அவர் நம்மிடையே பேசுகையில், “நான் 10 ஆண்டுகளாக கோவை தொழிற்பேட்டையில் பணியாற்றுகிறேன். தமிழகத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; நிறுவனம் சார்பில் எனக்கு தனியறை கொடுக்கப்பட்டிருக்கிறது, வசதியாகவே உள்ளேன். நிறுவனம் அல்லாத தமிழ் மக்களும் நன்றாகவே பழகுகிறார்கள்” என்றார்.
மேலும், “நிறுவனத்தில் வேலைக்கேற்ற சம்பளம் முறையாகக் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்கிறார்கள். எனது சம்பளத்தால் எனது குடும்பம் நன்றாக உள்ளது" என்றார்.