Published : 06,Mar 2023 10:16 PM

பறவைகளையும், விலங்குகளையும் கல்லாக்கும் உலகின் மிக ஆபத்தான நட்ரான் ஏரி!

Lake-Natron-is-the-world-s-most-dangerous-for-birds-and-animals

உலகின் மிக ஆபத்தான நட்ரான் ஏரி

“ஏரி இல்லா இடத்தில் குடி இருக்காதே” என்ற சொல் வழக்கு ஒன்று உள்ளது. ஏரிகளின் அருகாமையில் வீடுகள் இருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்பதற்காகச் சொல்லப்பட்ட சொல்வழக்கு அது. ஆனால், இன்று பல ஏரிகள் மூடப்பட்டு அதன் மேலே குடியிருப்புகள் வந்துவிட்டது. இது ஒரு வேதனை அளிக்கும் செய்தி என்றாலும், உலகில் உள்ள ஏரி ஒன்று விலங்குகளின், பறவைகளின் உயிரையே குடிக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?...

image

ஆப்பிரிக்காவின், வடக்கு தான்சானியாவில் உள்ள மிகவும் அபாயகரமான உப்பு ஏரி தான் அது. இந்த உப்பினால் அந்த ஏரி முழுவதும் சகதியாக காணப்படும். கோடை காலத்தில் உயர் வெப்ப நிலை காரணமாக இந்த ஏரியின் நீர் ஆவியாகிவிட்டதும், சோடியம் கார்பனேட் என்னும் உப்பு ஏரியில் தங்கி விடுகிறது. இதனால், ஏரியின் காரத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஏரி பார்ப்பதற்கு அழகான மிகவும் சிவப்பு வண்ணத்தைக் கொண்டிருக்கும் அதற்கு காரணம், இந்த ஏரியைச் சுற்றி இருக்கும் எரிமலைகள் அவ்வப்போது உக்கிரமாக கக்கும் லாவாக்களில் செந்நிறம் கொண்ட சோடியமும், கார்பனேட் மற்றும் கால்சியம் அதிகளவு இந்த ஏரியில் கலப்பதால், இரசாயமிக்க உலர் சிவப்பு நிறத்தைக்கொண்டிருக்கிறது.

image

இதில் அதிசயதக்க விஷயம் என்னவென்றால், இத்தகைய ஏரியில் ஒரு வகை மீன்களும், சில பாசி வகைகளும் வளர்கின்றன. அதே சமயம் இந்த ஏரிக்கு மேல் பறக்கும் பறவைகள் இத்தகைய உப்பு காற்றால் கல்லாக மாறிவிடுகிறதாம். அவ்வாறு கல்லாக மாறிய பறவை ஒன்றை புகைப்பட கலைஞர் ஒருவரால் படம் பிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்து பரபரப்பானது. ஆனால், சிலரின் கருத்துப்படி அந்த பறவையானது இயற்கையாக உயிரிழந்து அதன் பிறகு, அதன் மேல் உப்பு படிவம் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

image

பல விஞ்ஞானிகள் தான்சானியாவில் உள்ள நட்ரான் ஏரிக்கு அருகிலுள்ள கல் பறவைகளின் நிகழ்வை பின்வருமாறு விளக்குகிறார்கள்: சில இடங்களில் நீர் வெப்பநிலை 60° C க்கும் அதிகமாக இருக்கும், மேலும் ஏரியின் நீரானது மிகவும் உப்பு மற்றும் காரமானது என்பதால், பறவைகள், ஏரிக்குள் இறங்குகின்றன, ஏரியின் அமிலதன்மையால் உயிர்துறந்து உப்பால் உறைந்து விடுவதாக கூறுகின்றனர்.

image

இருப்பினும் இந்த ஏரி, மனிதர்கள், விலங்குகளுக்கு உபயோகமில்லாத ஏரி. இருப்பினும், இந்த பயங்கரமான ஏரியின் அழகைப்பார்க்க பல ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், இருப்பினும், ஆப்பிரிக்காவில் உள்ள இந்த ஆபத்தான இடத்திற்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நேட்ரான் ஏரி உலகின் மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஜெயஸ்ரீ அனந்த்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்