Published : 05,Mar 2023 10:44 PM
லோனில் கார் வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை இவைதான்!
கடன் பெற்று கார் வாங்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..
தனக்கென சொந்தமாக ஒரு வீடு, கார் இருக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவதுண்டு. அப்படி கார் வாங்க நினைப்பவர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கடன் பெற்றுதான் வாங்குவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சமீப காலமாக கார்களின் விலை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் பழைய கார்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. புதிய காருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையிலும் பழைய காருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.