[X] Close

சிவாஜி விழாவுக்கு ரஜினி, கமல் வர வேண்டும்: பிரபு வேண்டுகோள்

prabu-inveite-rajini-and-kamal-for-sivaji-ganesan-memorial-hall-opening

சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு புதியதாக நிறுவி உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தின் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார். பலரது வேண்டுகோளை ஏற்று இந்த ஏற்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். ஏற்கெனவே தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளதால் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, “அப்போது சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அவர் இப்போது இல்லாத நிலையில் ஓபிஎஸ் திறந்து வைக்க இருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம் நடிகர் திலகத்தின் மீது அன்பு கொண்டவர்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்க வேண்டும். அதோடு விழாவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் இந்த விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தினரது விருப்பம் என்று பிரபு கூறினார். அதேசமயம் மெரினா கடற்கரையில் சிவாஜி சிலை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று அவர் ஆதங்கப்பட்டார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close