"ஆணின் வெற்றிக்குப்பின் பெண் இருப்பார்; ஆனால் பெண்ணின் வெற்றிக்குப்பின்...”- லட்சுமி ரவி

"ஆணின் வெற்றிக்குப்பின் பெண் இருப்பார்; ஆனால் பெண்ணின் வெற்றிக்குப்பின்...”- லட்சுமி ரவி
"ஆணின் வெற்றிக்குப்பின் பெண் இருப்பார்; ஆனால் பெண்ணின் வெற்றிக்குப்பின்...”- லட்சுமி ரவி

“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும், பெண் இருப்பார்; ஆனால் பெண்ணின் வெற்றிக்குப் பின் ஆண் இருப்பார் என சொல்ல முடியாது” என பேசியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் தமிழக பெண் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர், ஆளுநர் மனைவி லட்சுமி ரவியிடம், “இன்றைய பெண்கள் வேலைக்கு செல்ல துவங்கினாலும், வீட்டு வேலையையும் அவர்களே செய்ய உள்ளது. இரண்டையும் பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். இதனை நீங்கள் எப்படி கடந்து வந்தீர்கள்?'' என அவரிடம் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அவர், “வீடுகளை பொறுத்தவரை பெண்களுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. உங்கள் பணிகளை நீங்கள் செய்யவில்லை என்றால் அந்த பணிகளையும் கணவர் தான் செய்ய வேண்டும் என கூறினால், அந்த கணவர் ஒரு நாளும் வெளியே செல்ல மாட்டார்” என கூறினார். இதை அவர் சொன்னவுடன், அரங்கில் உள்ள அனைவரும் கைதட்ட ஆளுநர் தன் கைகளை உயர்த்தி அதனை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருப்பார். ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும், ஆண் இருப்பார் என கூற முடியாது. நாகாலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கூட இல்லாமல் இருந்தது. இன்று அங்கு இரண்டு பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளர். வீட்டில் உங்களுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. வீட்டில் பெண்கள் இல்லை என்றால் எதுவும் நடைபெறாது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “என் மனைவி கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். என் கடினமான நேரங்களில் எல்லாம், அவர்தான் எனக்கு பலமாக இருந்தார்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com