[X] Close

மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி

Thirumurugan-Gandhi-arrested-near-Srilankan-embassy

சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்ட நிகழ்வின்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.

ஐ.நா.மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சியைக் கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். தடையை மீறி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தன்னை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் செல்வதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார்.

கைதுசெய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று சொன்னதால் ஆதரவு தெரிவிக்க வந்தோம். பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். பேட்டியும் தரவில்லை. தேநீர் கடையில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று கூறினார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close