Published : 27,Feb 2023 02:16 PM

வெறும் ”12.35 கோடி” - 16 மருத்துவமனைகளில் ’மதுரை எய்ம்ஸ்’-க்கு மட்டுமே மிக குறைவான நிதி!

Among-the-16-AIIMS-hospitals--Madurai-AIIMS-is-the-least-funded

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 2014 க்கு பிறகு கட்டப்பட்டு வரும் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்சுக்கு மட்டுமே மிக குறைவான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவிக்குமார் என்கிற ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஸ்வதயா ஸ்வரக்ஷா யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட 2014 க்கு பின் திட்டமிடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு கடந்த மாதம் 17ஆம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதிலளித்தது. அதில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் பிரதம மந்திரி ஸ்வதயா ஸ்வரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள 1977.8 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 12.35 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள தொகையில் 0.0062% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

image

உத்திரபிரதேசம் மாநிலம் ரேபிரேலி, ஆந்திர பிரதேசம் மாநிலம் மங்கலகிரி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர், மேற்கு வங்காளம் மாநிலம் கல்யாணி, பஞ்சாப் மாநிலம் பாதிண்டா, ஹிமாச்சல் மாநிலம் பில்லாஷ்பூர் போன்ற இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் முடிவடைந்து சில எய்ம்ஸ் முழுவதுமாகவும் பகுதி அளவும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், அசாம், ஜார்கண்ட், குஜராத் மாநிலம் ராஜ் கோட் போன்ற இடங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 60 சதவீதத்திற்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி இருப்பதால் அதன்படிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலம் பிபின் நகரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 13% அளவிற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

image

தற்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 14 மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே மிகக் குறைவான அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள தொகையில் 0.0062% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது.

2014 க்கு பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள 14 மருத்துவமனைகளில், மதுரை எய்ம்ஸ் மட்டுமே, திட்டம் அறிவிக்கப்பட்டு 12 வருடங்கள் கழித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதும் RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் தெரியவந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்