[X] Close

பன்னீர்செல்வத்திற்கு 5 எம்எல்ஏ-க்கள் ஆதரவு

5-MLAs-supports-TN-chief-minister-Pannerselvam

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 5 எம்எல்ஏ-க்கள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.


Advertisement

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனையடுத்து சசிகலா தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 131 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திடம், அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் தனக்கு உள்ள பலத்தை உறுதியாக நிரூபிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை ஒவ்வொன்றாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதமும், வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதனும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 5-ஆகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close