மும்பையில் ரயில் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்த நேரத்தில் மின் கசிவு ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இதனால் மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தை விட்டு முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றது. அவர்கள் குறுகிய நடை மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பலர் கீழே விழுந்து கூச்சலிட்ட நிலையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மும்பையில் புதிதாக 100 புறநகர் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் வந்திருந்த போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த அமைச்சர் பியுஷ் கோயல் பார்வையிட்டார். மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 30பேருக்கு மும்பை கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!