Published : 29,Sep 2017 06:43 AM

98% அதிமுக நிர்வாகிகள் எங்களுடன் உள்ளனர்: சி.வி.சண்முகம்

ADMK-Issue-TN-Minister-CV-Shanmugan-in-Delhi


தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து, கட்சியையும், சின்னத்தையும் மீட்போம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில், அதிமுகவின் 98 சதவித நிர்வாகிகள் தங்களுடன் இருப்பதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து, கட்சியையும், கட்சி சின்னத்தையும் மீட்போம் என்றார். டிசம்பர் 5, 2016ஆம் தேதியின் படி கட்சியில் இருந்த நிர்வாகிகளின் பட்டியல் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்