பாட புத்தகத்தில் காயிதே மில்லத் பேசியதாக இடம்பெற்ற தகவலை நீக்க கோரிய மனு தள்ளுபடி

பாட புத்தகத்தில் காயிதே மில்லத் பேசியதாக இடம்பெற்ற தகவலை நீக்க கோரிய மனு தள்ளுபடி
பாட புத்தகத்தில் காயிதே மில்லத் பேசியதாக இடம்பெற்ற தகவலை நீக்க கோரிய மனு தள்ளுபடி

7ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் காயிதே மில்லத் கூறியதாக இடம்பெற்றுள்ள தகவல் உண்மையானது இல்லை எனவும், அதை நீக்க வேண்டும் எனவும் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ”7ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் 52வது பக்கத்தில் கண்ணியமிகு தலைவர் என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த பாடத்தில், மொழிக்கொள்கை என்ற துணை தலைப்பில், சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி மொழியை தேர்வு செய்வதற்கான அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், பழமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில், தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க அவர் வற்புறுத்தவில்லை, இந்துஸ்தானி, தேவநகரி அல்லது உருது மொழியை தான் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று அவர் பேசியிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளது” என மனுவில் குறிப்பிடப்பட்டது.

மேலும், “வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்றக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கு தவறான வரலாற்றை போதிக்க கூடாது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறான தகவலை நீக்கி திருத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com