"மக்களை அடைத்து வைத்து அடிமைப்போல் நடத்துகின்றனர்: தேர்தலை நிறுத்த வேண்டும்" - பிரேமலதா

"மக்களை அடைத்து வைத்து அடிமைப்போல் நடத்துகின்றனர்: தேர்தலை நிறுத்த வேண்டும்" - பிரேமலதா
"மக்களை அடைத்து வைத்து அடிமைப்போல் நடத்துகின்றனர்: தேர்தலை நிறுத்த வேண்டும்" - பிரேமலதா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக பிரேமலாதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர்...

திருமகன் ஈவேரா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு தொகுதி தேமுதிகவிற்கு ஒன்றும் புதிதல்ல. 2011ல் தேமுதிக வென்ற தொகுதி இது. பெரியார் மண்ணில் தான் கட்சி துவங்கப்படும் என கேப்டன் தெரிவித்தார்.

ஈரோட்டில் இலவச மருத்துவமனை அமைத்து மக்கள் சேவையாற்றியவர் கேப்டன். ஈரோட்டில் பூத்திற்கு ஒரு அமைச்சர் இருந்து வாக்கு சேகரிக்கின்றனர். வாக்குக்கு பணம் கொடுக்க வந்தவர்கள், தேர்தலுக்கு முன்பு நன்மை செய்ய யாரும் வரவில்லை. மக்களை ஆடு மாடு போல் அடைத்து வைத்துள்ளனர். மக்களை அடிமை போல் நடத்துவதை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கிற்கு வந்து பார்த்து தேர்தலை நிறுத்த வேண்டும்.

திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்துவரி, நூல் விலை, பால் விலை என அடிப்படை பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்துள்ளது தேர்தலையொட்டி துறை சார்ந்த பணிகளை விட்டு விட்டு அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றாத நிலையில், முன்னேற்றமே இல்லாமல் மக்களை வஞ்சிக்கும் அரசுதான் உள்ளது.

மக்கள் பிரச்னையை பற்றி பேசாமல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி சாடிக் கொள்கின்றன. பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். என்னென்ன நல்ல திட்டங்கள் இருந்ததோ அதையெல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள் என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com