Published : 29,Sep 2017 02:42 AM
மருத்துவமனையில் கொள்ளை முயற்சி: சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மருத்துவமனையில் புகுந்த கொள்ளையர்களை, மருத்துவமனை ஊழியர்கள் துரத்திய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 11 மணியளவில் 3 கொள்ளையர்கள் புகுந்தனர். இருவர் கண்காணிப்பிற்காக வெளியே நின்று கொள்ள, மூன்றாவது நபர், சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு உள்ளே சென்று, கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் கூச்சலிடவும், அருகிலிருந்த ஊழியர்கள் ஓடிவந்துள்ளனர். ஊழியர்கள் துரத்தியதை அடுத்து, அங்கிருந்து கண்ணாடி கதவை உடைத்து வெளியேறி, இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். இந்தக்காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.