Published : 17,Feb 2023 03:43 PM
”வேற ஒன்னும் இல்ல ஆஸி நல்லா விளையாடுறாங்க..அதான் நிறுத்திட்டாங்க”- ட்ரோலாகும் HotStar!

இந்தியாவின் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளம் செயலிழந்ததை அடுத்து, இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை காண முடியாத ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல ஹாட்ஸ்டார் பயன்பாட்டாளர்களுக்கு வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலிழந்துள்ளது. தொடர்ந்து இணையதளம் லோடாகாமல் எர்ரர் காமித்து வருவதால், டெல்லியில் நடந்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண முடியாததால் தொடர்ந்து பயனர்கள் ட்விட்டரில் புகாரை தெரிவித்து வருகின்றனர்.
டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்டீரிமிங் ஆப் ஆனது இந்தியாவில் அதிகளவு பயன்பாட்டாளர்களை கொண்ட இயங்குதளமாக இருந்துவருகிறது. பிசிசிஐ-ன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை ஒளிபரப்பு செய்துவருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மணி நேரமாக ஸ்டீரிமிங் தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப் ஆனது டவுன்-ஆகி செயலிழந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்த புகாரை டிவிட்டர் வலைதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட்டர் அபினவ் முகுந்த், “ இது எனக்கு பிரச்சனையா? இல்லை, ஹாட்ஸ்டார் செயலிழந்துவிட்டதா? தொடர்ந்து எர்ரர் என்று காமித்து வருகிறது, யாராவது இதை சரிசெய்தார்களா” என்று பதிவிட்டுள்ளார்.
Is it me or is the hotstar app down? It keeps saying an error has occurred,anyone got a fix for it?
— Abhinav Mukund (@mukundabhinav) February 17, 2023
மற்றொரு ரசிகர், “ வேறு ஒன்றுமில்லை ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக நன்றாக விளையாடுவதால் தான், ஹாட்ஸ்டார் கனக்சனை நிறுத்தியுள்ளது” என்றும், “ எல்லாம் டிரவிஸ் ஹெட்டால வந்தது, அவர் அவுட்டானார் ஹாட்ஸ்டாரும் அவுட்டாகிவிட்டது” என்றும், ” ஹாட்ஸ்டார் ஒர்க் ஆகவில்லை”, ” என்னாச்சு இந்த ஹாட்ஸ்டாருக்கு” என தொடர்ந்து நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
Hotstar, when Australia is batting good against India. #hotstar#CricketTwitter#INDvsAUSpic.twitter.com/8Mmj33EKbl
— Himanshu Pareek (@Sports_Himanshu) February 17, 2023
ஹாட்ஸ்டார் பயன்பாட்டிற்கு செல்லும்போது PB-4000 பிழை என்றும், NM 4000 பிழை என்றும் காட்டுவதாக ரசிகர்கள் தொடர்ந்து புகாரை தெரிவித்து வருகின்றனர். சிலர் உண்மையில் ஹாட்ஸ்டார் டவுன் ஆகியுள்ளதால் விரக்தியில் பதிவிட்டுவருகின்றனர்.
@hotstar_helps Is hotstar down?
— Confused Pikachu (@KalpataruBaitha) February 17, 2023
Only getting this..Why? Please solve. pic.twitter.com/aP5otaHSTk