Published : 17,Feb 2023 09:28 AM

மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர்! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!

Shreyas-Iyer-is-back-in-the-team--Australia-won-the-toss-and-chose-to-bat-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. புகழ்பெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 5 நாள் ஆட்டமாக தொடங்கப்பட்ட போட்டியில், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

image

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சேர்ந்து 15 விக்கெட்டுகள் சாய்க்க, ரோகித் சர்மாவின் 120 ரன்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை 3ஆவது நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அந்த அணிக்கு எதிராக 3ஆவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது இந்திய அணி.

image

போட்டியின் முடிவுக்கு முன்னதாக, ஆடுகளத்தின் தன்மையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தன. ஆனால் அதற்கெல்லாம் ஆஸ்திரேலிய வீரரே பதிலடி கொடுக்கும் விதமாக அறிமுக வீரராக களமிறங்கிய டி முர்பி, இந்தியாவிற்கு எதிராக தனது முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தார். மேலும் ஆடுகளத்தில் இடது கை பேட்டர்கள் விளையாடவே முடியாது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இந்திய இடது கை பேட்டர்களான ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் 70, 84 ரன்கள் அடித்து, அந்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்தனர்.

image

இந்நிலையில் பலவிமர்சனங்களை கடந்து இன்று இரண்டாவது போட்டியானது டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. இந்திய அணியில் சூர்யகுமாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய நட்சத்திர பேட்டர் புஜாரா தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி சொந்த மண்ணின் ஆடுகளத்தில் பங்குபெற்று விளையாடுகிறார். அவரிடமிருந்து 3 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் சதத்தை, இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். 

இந்தியா ஆடும் அணி: ரோகித் சர்மா, கே எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் ( விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், அக்சர் பட்டேல், முகமது ஷமி, சிராஜ்.

image

ஆஸ்திரேலியா ஆடும் அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசனே, ஸ்டீவ் ஸ்மித், டிரவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், அலெக்ஸ் கேரி ( விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நாதன் லயன், டோட் முர்பி, மேத்யூ குனேமன்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்