Published : 16,Feb 2023 04:53 PM
தனுஷின் ‘வாத்தி’ பட இடைவேளையில் விஜய்யின் ‘லியோ’ டைட்டில் டீசர்.. ஆனால்?!

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில், விஜய்யின் ‘லியோ’ படத்தின் சென்சார் செய்யப்பட்ட டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாக உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில், நாக வம்சி தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தெலுங்கில் ‘சார்’ என்றப் பெயரில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்தப் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ஆந்திராவில் ஒரு சில இடங்களில் இன்றிரவே வெளியாகிறது. ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள இந்தப் படம், 2 மணிநேரம் 19 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
#Vaathi Censored 'U' with Runtime of 2Hrs 19Mins..
— Rickesツ (@TheRickesDfan) February 14, 2023
Pakka social message with family treat..#VaathiOn17Feb@dhanushkrajapic.twitter.com/dfhBee0YxX
இந்நிலையில், ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகும் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தின் இடைவேளையில், க்யூப் வொயர் மூலமாக விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் அடங்கிய வீடியோ திரையிடப்பட உள்ளது. இதற்காக அந்த டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யூட்யூப்பில் கடந்த 3-ம் தேதி இந்த டீசர் வெளியிடப்பட்டு, சுமார் 12 நாட்களில் 4 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Leo title announcement teaser from friday during #Vaathi interval. Bookings opened for #Vaathipic.twitter.com/qiudmJzQb1
— Raja Talkies Pondy (@rajatalkiespdy) February 15, 2023