சிவாஜியை அவமதிக்காதீர்...தமிழக அரசுக்கு குஷ்பு கண்டனம்

சிவாஜியை அவமதிக்காதீர்...தமிழக அரசுக்கு குஷ்பு கண்டனம்
சிவாஜியை அவமதிக்காதீர்...தமிழக அரசுக்கு குஷ்பு கண்டனம்

சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்காதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள குஷ்பு, மரியாதைக் குறைவான நடவடிக்கைகளால் சிவாஜியை அவமதிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழக அரசு நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டியுள்ளது. அதன் திறப்பு விழா நடக்க உள்ளது. ஆனால் அதில் முதல்வர் எடிப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்ளவில்லை. அது தொடர்பாக சிவாஜியின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கும் ஒரு பெரிய ஆளுமைக்கு எப்படி மதிப்பு அளிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழில் பெரிய நடிகர் அவர். உங்களுடைய மரியாதை குறைவான நடவடிக்கைகளை வெளிப்படுத்தி அவரை அவமதிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசு மற்றும் திமுகவின் வாகைசந்திரசேகர் ஆகியோர் இது தொடர்பாக தங்களின் கண்டனைத்தை பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com