Published : 15,Feb 2023 01:12 PM

துருக்கியை தொடரந்து நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

Strong-earthquake-hits-Wellington--New-Zealand

நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் துருக்கி - சிரியா நாடுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில் இன்று நியூசிலாந்தில் மற்றொரு  நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வீடுகள் குலுங்கிய நிலையில் பீதி அடைந்த மக்கள் வீடுகளில் தங்குவதற்கு பயந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த 6ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. அந்நிலநடுக்கத்தில் ஏராளமான மக்கள் பலியான நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழப்பும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உலக மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

image

இதனிடையே துருக்கி - சிரியா நிலநடுக்கம் ஏற்பட்ட ஓரிரு தினங்களில் இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான அசாமில் நில அதிர்வு உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து அண்டை மாநிலமான சிக்கிமிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்