[X] Close

ஏமனில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட கேரள பாதிரியார் டெல்லி வந்தார்

Father-Tom-Uzhunnalil--kidnapped-in-Yemen--has-been-rescued-and-return-to-india

ஏமனில் அடையாளம் தெரியாத நபர்களால் பிணைக் கைதியாக பிடித்து செல்லப்பட்டு மீட்கப்பட்ட கேரள பாதிரியார் உழுன்நாலில் இன்று பத்திரமாக டெல்லி வந்து சேர்ந்தார்.


Advertisement

டெல்லி விமான நிலையத்தில் ச‌க பாதிரியார்களும், நண்பர்களும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பாதிரியார், பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்‌தித்து பேசினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏமனின் துறைமுக நகரான ஏடனில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட பாதிரியாரை, இம்மாதம் 12 ஆம் தேதி ஏமன் அரசு மீட்டு, மஸ்கட்டுக்கு அனுப்பி வைத்தது. பின்னர் போப்பிடம் ஆசி பெறுவதற்காக அங்கிருந்து வாடிகன் சென்றிருந்த பாதிரியார் உழுன்நாலில் இன்று டெல்லி திரும்பினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close