Published : 14,Feb 2023 10:08 PM

காஷ்மீரில் 'லியோ' படப்பிடிப்புத் தளத்தில் காதலர் தினம் கொண்டாடிய த்ரிஷா

Trisha-celebrates-Valentine-s-Day-on-the-sets-of-Thalapathy-Vijay-s-Leo-SEE-PICS

காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவினருடன் ‘காதலர் தினம்’ கொண்டாடிய புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் - லோகேஷ் - அனிருத் கூட்டணி அமைத்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. வருகிற அக்டோபர் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாவதாக படத்தின் டைட்டில் டீசருடன் கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்த கையோடு, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர்.

image

ஆனால் படக்குழு புறப்பட்டு சென்ற இரண்டு, மூன்று நாட்களிலேயே காஷ்மீரில் இருந்து த்ரிஷா சென்னை திரும்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவி வந்தது. படத்தில் ப்ரியா ஆனந்திற்கு தான் முக்கியத்துவம் என்பதால், லோகேஷ் கனகராஜ் உடன் சண்டையிட்டு த்ரிஷா சென்னை வந்துவிட்டதாகவும், தனது போர்ஷனை 3 நாட்களில் முடித்துவிட்டுதான் த்ரிஷா திரும்பியதாகவும் வதந்திகள் பரவின.

மேலும், டெல்லி விமான நிலையத்தில் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலானதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர ‘லியோ’ படம் சம்பந்தமான சில ட்வீட்டுகளை த்ரிஷா டெலிட் செய்துவிட்டதால், அவர் ‘லியோ’ படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகின. இதற்கெல்லாம் நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

image

இந்நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ‘லியோ’ படக்குழுவினருடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார் த்ரிஷா. இதற்காக ‘லியோ’ படத்தில் பணியாற்றும் பெண்களுடன் சேர்ந்து பிங்க் நிற உடைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அணிந்து காஷ்மீரில் குழுவாக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் த்ரிஷாவுக்கு ரோஜா பூங்கொத்து ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளனர். அதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்