Published : 14,Feb 2023 08:08 PM
"2 வெவ்வேறு பாலினம் சார்ந்ததல்ல காதல்" - காதலர் தினத்தன்று ஜோதிகா பகிர்ந்த போஸ்டர்!

காதல் என்பது பாலினம் சார்ந்தது இல்லை என்றும், இரண்டு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்றும் நடிகை ஜோதிகா ‘காதல் என்பது பொதுவுடைமை’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘லென்ஸ்’, ‘தலைக்கூத்தல்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இரண்டுப் பெண்கள் காதல் கொள்வதுபோல் உள்ள இந்தப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை காதலர் தினமான இன்று நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் அவர், “இரண்டு வெவ்வேறான பாலினங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே காதல் அல்ல. அது இரண்டு தூய்மையான இதயங்களைப் பற்றியது. காதலை மதிப்பதன் மூலம் காதலர் தினத்தை கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதே கருத்தை வலியுறுத்தி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாவில் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் தான், ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ‘ஜெய்பீம்’ புகழ் லிஜோமோல், ரோகிணி, அனுஷா பிரபு, தீபா, வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் நாரயணன் இசையமைத்துள்ளார்.
First Look Poster of #KaadhalEnbadhuPodhuUdamai#LoveIsForAll#KEPUFirstLook
— Guna (@pro_guna) February 14, 2023
From The makers of #TheGreatIndianKitchen@jeobaby@JPtheactor@subhaskaar@nobinkurian@jose_lijomol@danivcharles@srkalesh@anuv_prabhu@srkalesh@sreesaravanandp@RajeshSaseendr1@pro_gunapic.twitter.com/f1QEvbhpWP