Published : 14,Feb 2023 01:57 PM

பப்ளிக் டாய்லெட்டில் ஏன் பாதி கதவுகள் மட்டும் இருக்கிறது? பின்னணி காரணம் இதோ!

the-reason-for-why-do-bathroom-stall-doors-have-gaps-

வணிக வளாகங்கள், அலுவலகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல பொது இடங்களில் உள்ள கழிவறைகளின் கதவுகள் பெரும்பாலும் முக்கால்வாசியே இருக்கும். இதுபோன்ற முழுமையடையாத கதவுகள் குறித்து பலருக்கும் பல விதமான சந்தேகங்களை எழுந்திருக்கும்.

ஏனெனில் முழுமையான அளவில் ப்ரைவசி கிடைக்கும் ஒரே இடமாக இருப்பது என்னவோ கழிவறையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த கழிவறையின் கதவுகளே முழுமையாக இல்லாத போது எந்த காரணத்துக்காக இந்த மாதிரியான கதவுகள் அமைக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. ஆனால் இப்படியான அமைப்பில் பொது இடங்களில் உள்ள கழிவறை கதவுகள் இருப்பதற்கும் முக்கிய பின்னணி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவை என்னவென்று காணலாம்.

Here are 8 reasons why the public toilet door always has space at the bottom

முழுமுதற் காரணமாக எமெர்சென்சியே இப்படியான கழிவறை கதவுகள் அமைக்கப்படுவதற்கு பின்னணியாக இருக்கிறது. ஏனெனில் கழிவறையில் இருக்கும் வேளையில் எவரேனும் மயங்கி விழுந்தாலோ அல்லது ஏதேனும் உடல்நலக்கோளாறு ஏற்பாட்டாலோ மற்ற அறைகளில் இருப்பவர்களால் அதனை அறிந்து தக்க சமயத்தில் உதவு முடியும் என்பதற்காகவே கதவுகள் தரை வரை அமைக்கப்படாமல் கால்கள் தெரியும் அளவுக்கு உருவாக்கப்படுகின்றனவாம்.

இது ஒரு காரணமாக இருந்தாலும், பொது இடங்களில் உள்ள கழிவறைகளை மக்கள் ஒரு நாள் முழுக்க பயன்படுத்துவதால் அதனை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டிய கட்டாயம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் தரை வரை இருக்கும் கதவை திறந்து சுத்தம் செய்வதற்கு பதில் பாதியளவில் கதவுகள் இருந்தால் ஒவ்வொரு முறையும் பணியாளர்களுக்கு சுத்தம் செய்வது எளிதானதாக அமையும்.

bathroom stall doors

இதற்கடுத்தபடியாக முழுமையற்ற கதவுகள் இருப்பதால் விரும்பத்தகாத பாலியல் ரீதியான நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதனை தடுக்க பாதுகாவலர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்பதற்காகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மேலும், பொதுக்கழிப்பிடங்களில் இவ்வாறு முழுமையற்ற கதவுகளை அமைப்பதற்காக அதனை உற்பத்தி செய்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தனித்தனியாக அளவெடுக்க வேண்டிய பணிச்சுமையும் குறைவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த காரணங்களை டிக்டாக் தளத்தின் பிரபல பயனராக இருக்கும் mattypstories என்பவர் தனது பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்